புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் மாடர்ன் உடை அணிந்து ஒய்யாரமாக நடந்து திருநங்கைகள் பார்வையாளர்களை கிரங்கடித்தனர்.
புதுச்சேரி அடுத்த பிள்ளையார் குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சியும், நேற்று இரவு கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
undefined
காதல் திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல்; கணவன் வீட்டில் பெண் தர்ணா
விழாவின் ஒரு பகுதியாக திருநங்கைகளுக்கான அழகிகள் போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்று பாரம்பரிய உடைகளிலும், இரண்டாவது சுற்று மாடர்ன் உடைகளிலும், மூன்றாவது சுற்று தனித்திறமைகள் வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த அழகி போட்டியில் புதுச்சேரியைச் சேர்ந்த பாவியா என்ற திருநங்கை முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு முதல் பரிசுக்கான விருதை புதுச்சேரி காவல்துறை கண்காணிப்பாளர் வம்சிதரெட்டி வழங்கினார்.