மக்களே பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா.. அப்படினா இன்று முதல் தொடங்கியது ரயில் டிக்கெட் முன்பதிவு.!

By vinoth kumarFirst Published Sep 13, 2023, 8:57 AM IST
Highlights

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே விரைவு ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்குவது வழக்கம். அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டியை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் இன்று முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே விரைவு ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்குவது வழக்கம். அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*  இன்று முன்பதிவு செய்வோர் ஜனவரி 11ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்

*  செப்டம்பர் 14ம் தேதி(நாளை) முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்

*  செப்டம்பர் 15ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்

*  செப்டம்பர் 16ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்

*  செப்டம்பர் 17ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்

*  செப்டம்பர் 18ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்

*  செப்டம்பர் 19ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ம் தேதி பயணம் செய்யலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

click me!