
போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் அமைச்சருடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் 46 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் மாநிலம் முழுவதும் 1.43 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும், அடிப்படை ஊதியத்தை குறைந்தபட்சம் 20, 700 ஆக உயர்த்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன.
இதுகுறித்த பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இதில் தமிழக அரசு சார்பில் மூன்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 2.57% ஊதிய உயர்வு என்றால் 10 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். 2.44 ஊதிய உயர்வு என்றால் 4 ஆண்டுக்கு ஒருமுறை பேச்சு நடத்தலாம் 2.37 % ஊதிய உயர்வு என்றால் 3 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு பேச்சு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மூன்று யோசனைகளில் ஒன்றை முடிவு செய்வது பற்றி தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குகுவது குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , வரும் 9 ஆம் தேதி பொங்கல் முன்பதிவு தொடங்கும் என்றும் 11,12,13 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்..
சென்னை கோயம்பேட்டில் 29 சிறப்பு கவுண்டர்கள் முன்பதிவுக்காக திறக்கப்படவுள்ளதாகவும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சுமார் 6 லட்சம் பொதுமக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்த அமைச்சர் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு கோயம்பேடு, சைதாபேட்டை, பூவிருந்தவல்லி, அண்ணாநகர், தாம்பரம் மெப்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் எம்,ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் அமைச்சருடன் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் 46 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளது.