ஒரே தொகுதியில் பலமுறை வென்ற 'டாப்' அரசியல் தலைவர்கள் யார்? யார்? முழு விவரம் இதோ!

Published : Mar 24, 2026, 10:46 PM IST
tamilandu-government-30753.gif

சுருக்கம்

TN Election 2026: தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரே தொகுதியில் பலமுறை வென்ற டாப் அரசியல் தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக சுழன்று வருகின்றன. தமிழகத்தில் ஒரே தொகுதியில் 5 முறைக்கும் மேலாக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியையே தங்களின் கோட்டையாக மாற்றிய தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

துரைமுருகன் (காட்பாடி)

திமுகவின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான துரைமுருகன், காட்பாடி தொகுதியின் அசைக்க முடியாத தலைவராக விளங்குகிறார். இவர் 1971, 1989, 1996, 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் காட்பாடியில் வெற்றி பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

கே. ஏ. செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்)

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 9 முறை (1977, 1980, 1984, 1991, 2006, 2011, 2016, 2021 மற்றும் 1989-ல் அதிமுக ஜெயலலிதா அணி சார்பில்) வெற்றி பெற்று அசத்தினார்.

ஓ. பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்)

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்றவர். இவர் போடிநாயக்கனூர் தொகுதியில் 3 முறை (2011, 2016, 2021) மற்றும் பெரியகுளம் தொகுதியில் 2 முறை என மொத்தம் 5 முறைக்கு மேல் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

கே. பி. அன்பழகன் (பாலக்கோடு)

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் பாலக்கோடு தொகுதியில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வருகிறார். இவர் 2001, 2006, 2011, 2016, 2021 என முறை இந்த தொகுதியில் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இலவசங்களே இல்லாத ஆட்சி அமையுமா? கடனில் தவிக்கும் மாநிலத்தை மீட்கப்போவது யார்?
’குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃபிரிட்ஜ்... மருத்துவப்படிப்புக்கு 10% இடஒதுக்கீடு..! அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை