முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாப்படுகிறது. அந்த தினத்தில் பள்ளிகளில் சிறப்பு நிகழ்வுகள், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமையான நாளை பள்ளிகள் முழுவேலை நாளாக செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாப்படுகிறது. அந்த தினத்தில் பள்ளிகளில் சிறப்பு நிகழ்வுகள், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க;- தக்காளி விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்ப்பதா? ஆளுங்கட்சியை அலறவிடும் வானதி சீனிவாசன்
அதன்படி ஜூலை 15ம் தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க;- தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?எஸ்வி.சேகரை லெப்ட் ரைட் வாங்கி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி
அன்றைய நாளில் காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.