நாமக்கல்லில் 322 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபைக் கூட்டம்;

 
Published : Oct 02, 2017, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
நாமக்கல்லில் 322 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபைக் கூட்டம்;

சுருக்கம்

Tomorrow meeting in 322 village panchayats in Namakkal

நாமக்கல்

நாமக்கல்லில் 322 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 322 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிராம வளம், தூய்மைக்கான இரு வார இயக்கத்தை அக்டோபர் 1 முதல் 15 வரை கொண்டாடுவது, குடிநீரைச் சிக்கனமாக உபயோகித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவைக் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நிதி செலவின விவரம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

கூடுதலாக ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு, பொது சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் கிராமசாலைத் திட்டப் பணிகள், சமூகத் தணிக்கை, மகளிர் திட்டச் செயல்பாடுகள், தனி அலுவலரால் கொண்டுவரப்படும் பொருள்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும்.

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!