
மதுரை
அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்தும்போது மட்டும் ரூ.200 கட்டணம் கொடுத்தால் போதும். கூடுதல் கட்டண்ம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் இடத்தில் செட்டாப் பாக்சை பொருத்தி செயலாக்கம் செய்யப்படுகிறது. அதற்காக ஒருமுறை மட்டும் 200 ரூபாய் கட்டணமாக பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனவே, செட்டாப்பாக்சை பொருத்தி, செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.200–க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதல் தொகை எதுவும் செலுத்தத் தேவையில்லை.
இதற்குமேல் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால் அது தொடர்பான புகாரை கட்டணமில்லா தொலைபேசி 1800-452-2911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்று அதில் ஆட்சியர் வீரராகவராவ் கூறியிருந்தார்.