20 ஆண்டுகளுக்கு பின் வரலாறு …. தமிழகத்தில் கொட்டித் தீ்ர்த்த தென் மேற்கு பருவமழை!

 
Published : Oct 01, 2017, 02:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
20 ஆண்டுகளுக்கு பின் வரலாறு …. தமிழகத்தில் கொட்டித் தீ்ர்த்த தென் மேற்கு பருவமழை!

சுருக்கம்

Southwest monsoon Tamil Nadu gets highest rain since 1996

தமிழகத்தில் கடந்த 1996ம் ஆண்டுக்கு பின், அதாவது 20 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தான் தென் மேற்கு பருவமழை 400 மி.மீ அளவுக்கும் அதிகமாகப் பெய்துள்ளது. ஏறக்குறைய 30 மாவட்டங்களில் வழக்கத்தைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகமாக மழை பொழிவு இருந்துள்ளது .

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவமழை காலமாகும். தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்கு பருவமழையில்தான் அதிக மழையைப்பெறும் என்றபோதிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒட்டிய மாவட்டங்கள் குறிப்பிடத்தகுந்த மழையைப் பெறும். தென் மேற்கு பருவமழையின் மூலம் தமிழகம் 30 சதவீதம் அளவுக்கு மழை கிடைக்கும்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக நாடுமுழுவதும் சுறுசுறுப்பாக இருந்த தென் மேற்கு பருவமழை நேற்றோடு முடிந்தது. இதில் தமிழகத்தில் கணக்கில் எடுத்துக்கொண்டால், கடந்த 3 மாதங்களில் 414மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் தென் மேற்கு பருவமழை 400 மி.மீ அளவை முதல் முறையாகத் தாண்டியுள்ளது. அதாவது கடைசியாக  1996ம் ஆண்டு 554மிமீ. மழை பெய்தது, அதற்குபின் 400 மி.மீ அளவு மழையை தமிழகம் தாண்டியது இல்லை. 20 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இப்போது இந்த வரலாறு படைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு தென் மேற்கு மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தைக் காட்டிலும் 20 சதவீதம் குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 30சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது.

மேலும் , செப்டம்பர் மாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 162 மி.மீ மழை பெய்துள்ளது. ஆகஸ்டு மாதத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 161 மி.மீ மழை பெய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாதத்தில் நுங்கம்பாக்கத்தில் 509 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைக் காட்டிலும் 66 மி.மீ அதிகமாகும். அதேபோல, மீனம்பாக்கம்  638 மி.மீ மழை பதிவானது. இதுவும் வழக்கத்தைக் காட்டிலும் 150மி.மீ கூடுதலாகும். சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, ரெட்ஹில்ஸ் ஆகிய ஏரிகளும் ஓரளவுக்கு நீர்வரத்தைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், தென் மேற்கு பருவமழை அட்டவணைப்படி நேற்றோடு முடிந்தாலும், இன்னும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேசமயம், தமிழகத்துக்கு மழையைக் கொடுக்குக் கூடிய வடகிழக்கு பருவமழை அக்டோபர்  இறுதியில தொடங்க வாய்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
 அவர் கூறுகையில், “ ெசன்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் நிரம்ப வேண்டுமானால், வடகிழக்கு பருவமழையில்தான் முடியும். இந்த பருவகாலத்தில் பரவலாக மழை கிடைக்கும். மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் இந்த காலத்தில ஏற்பட்டு அதிக மழை கிடைக்கும். வழக்கமாக அக்டோபர் 15ந்தேதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக, அக்டோபர் இறுதியில் தான் தொடங்குகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 28ந்தேதி தொடங்கியது” என்றார்.

PREV
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!