
இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான தலைநகரங்களுக்கான பட்டியலில் சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய மாநில தலைநகரங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பு குறித்து தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு இந்தியாவின் ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், ஆண் - பெண் ஆகியோர் அதிக பாதுகாப்பாக சென்னை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிறுவனம், டெல்லி மாநிலத்தில் ஆய்வு நடத்தியபோது, தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் 9 மணிக்குமேல் வீட்டுக்கு திரும்பவில்லை என்றால் பதற்றம் அடைவதாக 87 சதவீத டெல்லிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்ததாக பெங்களூரில் 55 சதவீதத்தினரும், மும்பை மாநகரில் 48 சதவீதத்தினரும் பதற்றம் அடைவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், சென்னையில் 30 சதவீத மக்கள் மட்டுமே பெண்கள் 9 மணிக்குமேல் வீடு திரும்பாவிட்டால் பயப்படுவதாக கூறியுள்ளனர்.