Vaccination camp : தமிழகம் முழுவதும் நாளை 14வது மெகா தடுப்பூசி முகாம்… தயார் நிலையில் 50,000 மையங்கள்!!

By Narendran SFirst Published Dec 10, 2021, 5:46 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை 14வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை 14வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிய 11 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை 100 கோடிக்கும் மேலான டோஸ்  தடுப்பூசி போடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாத மக்கள், பிறகு கூட்டம் கூட்டமாக போட்டுக்கொள்ள தொடங்கினர். இதனால், பொது மக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா முகாம்களுக்கு  ஏற்பாடு தடுப்பூசி போட வசதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2வது தவணையும் போடாமல் உள்ளனர். இந்த நிலையில் 14வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பணியில் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். கடந்த வாரம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதே அளவிற்கு நாளை நடைபெறும் மெகா முகாம்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில் சிலர் தானாகவே தடுப்பூசி போட முன்வருகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மெகா முகாம்கள் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் சனிக்கிழமைகளில் தற்போது பள்ளிக்கூடங்கள் செயல்படுவதால் பள்ளிகளில் முகாம்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடக்கூடியவர்கள் பள்ளிகளுக்கு வழக்கம்போல போட சென்றனர்.

ஆனால் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்றதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். சென்னையில் 1,600 முகாம்கள் நடத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகள் நாளை செயல்படுவதால் மாற்று இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக் கூடியவர்கள் இதுவரையில் தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதே அளவிற்கு நாளை நடைபெறும் மெகா முகாம்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.

click me!