நெல்லையில் தொடரும் கந்துவட்டி கொடுமை - போராட்டம் அறிவிப்பு...!

First Published Oct 24, 2017, 9:15 AM IST
Highlights
Today various organizations especially Tamil organizations and Hindu feminists are going to have a fight today in Nellai district.


நெல்லை மாவட்டத்தில் பெருகி வரும் கந்துவட்டியை தடை செய்யக் கோரி இந்த போராட்டங்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன போராட்டங்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தீக்குளித்தனர். 
கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.

70% மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி, அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார். 

இதைதொடர்ந்து பல தலைவர்கள் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர். நேரடியாக வைகோ, திருமாவளவன், அமீத் அன்சாரி உள்ளிட்ட பல தலைவர்கள் மருத்துவமனையில் வந்து கண்டனங்களை பதிவு செய்துவிட்டு சென்றனர். 

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு அமைப்புகள், குறிப்பாக தமிழர் அமைப்புகள், இந்து முன்னணியினர் உள்ளிட்ட அமைப்புகள் இன்று போராட்டம் நடத்த உள்ளனர். 

நெல்லை மாவட்டத்தில் பெருகி வரும் கந்துவட்டியை தடை செய்யக் கோரி இந்த போராட்டங்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன போராட்டங்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையெ கந்துவட்டி கொடுமை சம்மந்தமாக கலையநல்லூர் அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, அவரது கணவர் தலவாய்ராஜன் ஆகிய 2 பேரையும் தமிழ்நாடு கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!