
சென்னையில் காலை நேரத்தில் நல்ல கனமழைக்கு வாய்ப்பு இருந்தபோதிலும்,மழை தரக்கூடிய மேகக்கூட்டம் கடலில் மழையை பெய்ததால், இன்று மிதமான, லேசான மழைக்கே வாய்ப்பு இருப்பதாக தி தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
தி தமிழ்நாடு வெதர்மேன் என்று சொல்லக்கூடிய பிரதீப் ஜான் பேஸ்புக்கில் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
பெரும்பாலான கனமழை என்பது, சென்னையின் நிலப்பகுதியில் பெய்வதற்கு பதிலாக கடல்பகுதிக்கு அருகே பெய்துவிட்டது. இப்போது இருக்கும் மேகக்கூட்டம் மிகப்பெரியதாக இருந்தாலும் கூட அது கலையத் தொடங்கிவிடும். இப்போதுள்ள நிலையில் சென்னை நகரில் லேசான மழைமட்டுமே பெய்யும்.
காலை நேரத்தில் பெய்யக்கூடிய மிகப்பெரிய கனமழை நமக்குஅருகே வந்து தவறிவிட்டது.அந்த மழை சில கி.மீ உள்ளே நகர்ந்து வந்து இருந்தால், அது மிக, மிக கனமழையாக நமக்கு கிடைத்து இருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை.கடந்த 10 மணிநேரமாக நான் காத்திருந்தேன். மழை என்பது கடலுக்கு அருகே இருக்கும் பகுதியில் தான் பெய்துள்ளது. இப்போது மேக்கூட்டங்கள் வலுவிழக்கத் தொடங்கிவிட்டன. ஆதலால் தூங்கச் செல்லலாம்.
இன்று பகல் நேரத்தில் மழை இருக்குமா?
இன்று பகல் நேரத்தில் கனமழையை பெய்ய வாய்ப்பில்லை. மிதமான அல்லது லேசான சாரல் பெய்வதற்கே வாய்ப்புஇருப்பதால், உங்களின் வழக்கமான , திட்டமிட்டுருந்த பணிகளைத் தொடரலாம்.
இன்று மாலை, இரவு எப்படி?
நமக்கு அருகேதான் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இருந்து வருகிறது, ஆதலால், மீண்டும் மேகக்கூட்டங்களை உருவாக்க அது முயற்சிக்கும். அது சில நேரங்களில் சென்னை மீதுகூட அந்த மேகக்கூட்டகள் வரவாய்ப்புள்ளது. இப்போது இருக்கும் மேகக்கூட்டம் வலுவிழக்கும் போபோது, அடுத்த மேகக்கூட்டங்கள் உருவாக மாலை அல்லது இரவுவரைகூட ஆகலாம். ஆதலால், இரவு நேரத்தில் நல்ல மழை இருக்கும் என நம்புவோம்.
இவ்வாறு அவர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.