
சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி செந்தில்குமாரிடம் வாங்கிய கடனை விட அதிக வட்டி கேட்டு மிரட்டிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் சில நாட்களாக கந்துவட்டி கொடுமை தலை தூக்கி வருகிறது. அந்த வரிசையில் சில நாட்களுக்கு முன்பு நெல்லை அருகே வாங்கிய கடனை விட அதிகமாக வட்டி கேட்டு மிரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் குடும்பத்துடன் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அங்காங்கே பெரும்பாலானோர் கந்துவட்டி கொடுமையால் இன்னல் படுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு மண்ணெண்ணை கேனுடன் வந்துவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சீர்காழி அருகே மாற்றுத்திறனாளி செந்தில்குமார் என்பவர் ராஜேந்திரன் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை விட அதிக வட்டி கட்டியும் இன்னும் பணம் கேட்டு செந்தில்குமாரை, ராஜேந்திரன் மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை உடனடியாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.