சென்னையில இன்னைக்கும் மழை பெய்யும் !! ஆனா வெள்ளம் வரும்னு பயப்படவேண்டாம் …. தமிழ்நாடு வெதர்மேன் !!!

 
Published : Nov 02, 2017, 10:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
சென்னையில இன்னைக்கும் மழை பெய்யும் !! ஆனா வெள்ளம் வரும்னு பயப்படவேண்டாம் …. தமிழ்நாடு வெதர்மேன் !!!

சுருக்கம்

today rain in chennai

சென்னையில் பல இடங்களில் இன்னும் சற்றுநேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம். வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த திருநெல்வேலி, தூத்துக்குடியில் நேற்று மிக கனமழை பெய்து குளிர்வித்துள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையைப் பொருத்தவரை இன்று அவ்வப்போது லேசான மழை மட்டுமே பெய்யும். அதேசமயம், இடைவெளியும் நீண்டநேரம் இருக்கும். வெள்ளம் வந்துவிடுமோ என்று யாரும் பயப்படவேண்டாம் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இரவு முழுவதும் நீண்டஇடைவெளி எடுத்து இருந்தமழை  இன்றும் கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொடங்கப்போகிறது என்றும்  நகரின் பல இடங்களில் இன்னும் சற்று நேரத்தில் மழையை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு பின் திருநெல்வேலியில் 150 மி.மீ மழை நேற்று பெய்தது. . 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்ததால் பல பகுதிகள் மழை நீரில் தத்தளித்தன.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; நம்பியாறு அணை நீர்மட்டம், ஒரே நாளில், 9.40 அடி உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் 165 மி.மீ, திருச்செந்தூரில் ஒரு ஆண்டுக்கு பின் 65 மி.மீ மழையும் பெய்தது. தூத்துக்குடியிலும் மழை பெய்து குளிர்வித்தது. 

டெல்டா மாவட்டங்களில் கூட இப்போது இருந்து மழையை எதிர்பார்க்கலாம். இன்று நாள் முழுவதும் டெல்டா பகுதிகளில் மழை இருக்கும் என்றும் வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.. 

சென்னையில் வடகிழக்கு, கிழக்குப்பகுதியில் மேகக்கூட்டங்கள் கூட்டமாகக் காணப்படுகின்றன. அவை கிழக்கு மற்றும் தென் கிழக்கில் இருந்து சென்னையை நோக்கி நகரும்போது, நகரில் மீண்டும் கனமழை இடைவெளிவிட்டு இருக்கும்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்