இன்று  தொடங்குகிறது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்வு….நாளை பொதுக் கலந்தாய்வு…

 
Published : Aug 24, 2017, 08:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
இன்று  தொடங்குகிறது மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்வு….நாளை பொதுக் கலந்தாய்வு…

சுருக்கம்

today medial couselling for handicapped students

 

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக  நீட்  தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று  மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 2 ஆயிரத்து 900 இடங்கள் இருக்கின்றன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு மீதம் உள்ள இடங்கள் 2 ஆயிரத்து 445 ஆகும். சுயநிதி மருத்துவ கல்லூரிகளையும் சேர்த்து அரசு ஒதுக்கீட்டுக்கு 3 ஆயிரத்து 534 இடங்கள் உள்ளன.

அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக தமிழகத்துக்கு 85 இடங்கள் இருக்கின்றன. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1,198 இடங்கள் வருகின்றன.

கடந்த ஆண்டு வரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மாநில பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடைபெற்றது. ஆனால் நீட் தேர்வுகளின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தவிட்டது.

இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் அவசர சட்டத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நீர் தேர்வு அடிப்படையிலேயே அட்மிஷன் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் முதல் முறையாக ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நீர் தேர்வு அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நாளை பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

 

 

PREV
click me!

Recommended Stories

நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!