Tamilnadu Rains : தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

Published : Mar 23, 2022, 02:14 PM IST
Tamilnadu Rains : தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

சுருக்கம்

வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு :

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 26ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதி  வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவன் வானம் ஓரளவு மேகப்புள்ளது. அதிகபட்ச அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் :

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். நேற்று காலை 8:30 மணி அளவில் வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.

தற்போது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மியான்மர் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது. இது மேலும் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0530 மணி அளவில் மியான்மர் கடற்கரையை கடந்தது. இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இன்று காலை 8:30 மணி மியான்மர் பகுதியில் நிலவியது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!