#Breaking:இரண்டாவது நாளாக 10,000க்கும் மேல் பதிவு.. சென்னையில் 6186.. மூன்று மாவட்டங்களில் எகிறும் கொரோனா..

Published : Jan 09, 2022, 08:44 PM ISTUpdated : Jan 09, 2022, 08:45 PM IST
#Breaking:இரண்டாவது நாளாக 10,000க்கும் மேல் பதிவு.. சென்னையில் 6186.. மூன்று மாவட்டங்களில் எகிறும் கொரோனா..

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு உள்ளது. அதே போல் கோவை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று  ஒரே நாளில் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 10,098 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,917 அதிகரித்து 12,895 ஆக பதிவாகியுள்ளது. 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 12,895பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. சென்னையில் மட்டும் 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 5,098 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 1088 அதிகரித்து  6,186 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 12,861பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 34பேர் என 12,895 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,855 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 40,260 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து 1,808 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,12,096 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1332 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1512 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் திருவள்ளூரில் 591 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 702 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் 585 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு 608 ஆக அதிகரித்துள்ளது. வேலூரில் 243 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 295 ஆக அதிகரித்துள்ளது.  மதுரையில் 314 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 348 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 309 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 343 ஆக அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் 202 ஆக பதிவான நிலையில் 122 ஆக குறைந்துள்ளது. திருச்சியில் 237 ஆக இருந்த நிலையில் 275 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூரில் 226 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 219 ஆக குறைந்துள்ளது. 

இதேபோல் நெல்லை 170, விருதுநகர் 168, கன்னியாகுமரி 184, ஈரோடு 149, ராணிப்பேட்டை 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக அளவில் கொரோனா தினசரி பாதிப்பு உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!