
இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத் தேர்வு…பிட் அடித்தால் கடும் நடவடிக்கை…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இன்றும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளன.
தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாணவர்கள் பிட் அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இன்று தொடங்கும் இந்த தேர்வுகளுக்காக விடைத்தாள் ஏற்கனவே தேர்வுத்துறையால் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. அதன் முகப்பு சீட்டில் மாணவர்களுக்கு உரிய பதிவு எண் எழுதப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் பதிவு எண்ணை எழுத வேண்டியது இல்லை.
தேர்வுக்குரிய வினாத்தாள்கள் பாட வாரியாக அந்தந்த மையங்களுக்கு அனுப்பப்பட்டு வினாத்தாள் காப்பு மையங்களில் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கிறது.
மாணவர்கள் பிட் அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் தேர்வுப்பணியை பார்வையிட உள்ளனர்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்த தரப்பட்டுள்ளன.
பிட் அடித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.