“இன்னைக்கும் மழை இருக்கு” – மறக்காமல் குடை எடுத்துகிட்டு போங்க...!!!

 
Published : Jun 22, 2017, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:47 AM IST
“இன்னைக்கும் மழை இருக்கு” – மறக்காமல் குடை எடுத்துகிட்டு போங்க...!!!

சுருக்கம்

today also rain will confirm by chennai weather report

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதையடுத்து கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதியே கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேவகோட்டையில் 3 செமீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!