
தருமபுரி
தருமபுரி நகராட்சியில் உள்ள கமலா நேரு மகப்பேறு மருத்துவமனையை முழுநேர மருத்துவரை நியமித்து 24 மணி நேரமும் இயக்க வேண்டும் என்று காங்கிரசு கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தி உள்ளனர்.
தருமபுரியில் காங்கிரசு கட்சியின் நகர காங்கிரசு ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரக் காங்கிரசு தலைவர் எஸ். செந்தில்குமார் தலைமைத் தாங்கினார். மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில், "தருமபுரி நகராட்சி கமலா நேரு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பிற்பகல் 4 மணிக்கு மூடிவிட்டுச் செல்லும் நிலை உள்ளது. இதைச் சரிசெய்ய முழுநேர மருத்துவர் நியமனம் செய்து 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மாற்ற வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் இதை செய்யத் தவறினால் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
நகரின் நெரிசலைத் தவிர்க்க போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.
நகரப் பேருந்து நிலையத்துக்கு தியாகி தீர்த்தகிரியார் பெயரைச் சூட்ட வேண்டும். ஏற்கெனவே, அந்த இடத்தில் தீர்த்தகிரியார் சதுக்கம் என்ற பெயரில்தான் திடல் இருந்தது குறிப்பிடத்தக்கது" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர்கள் சேகர், மாது, செயலர்கள் கே.கே. லெனின், சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.