அரசு பேருந்துகளில் இருந்து ஏசி அகற்றம்... டிஎன்எஸ்டிசி எடுத்த அதிரடி முடிவால் பயணிகள் அதிர்ச்சி!!

By Narendran S  |  First Published Apr 17, 2023, 8:43 PM IST

அரசு பேருந்துகளில் இருந்து ஏசி வசதிகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அரசு பேருந்துகளில் இருந்து ஏசி வசதிகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடைக்காலம் என்பதால், மாநில போக்குவரத்துக் கழகம் நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் அதிக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இயக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு நேர்மாறாக அரசு போக்குவரத்து கழகம் செயல்படுகிறது. சென்னை-திருச்சி போன்ற முக்கிய வழித்தடங்களில் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளை விட 20 முதல் 40 ரூபாய் வரை குறைவான கட்டணத்தில் பொருளாதார ஏசி சேவைகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வந்தது. ஆனால் தற்போது இந்த பேருந்துகளில் உள்ள ஏசிகளை அகற்றப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரத்தில் சூர்யா பிறழ் சாட்சி கூறியது ஏன்? தாத்தா பூதப்பாண்டி விளக்கம்

Tap to resize

Latest Videos

கடந்த ஆண்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC), நீண்ட தூர பேருந்துகளை இயக்கும் மற்றொரு அரசுக்குச் சொந்தமான நிறுவனமானது, ஏழு ஆண்டுகள் பழமையான ஏசி பேருந்துகளை ஏசி அல்லாத பேருந்துகளாக மாற்றியது. தற்போது கும்பகோணம் இதைப் பின்பற்றுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசு புதிய ஏசி பேருந்துகள் எதையும் வாங்காத நிலையில், தற்போதுள்ளவை கூட ஏசி அல்லாத சேவைகளாக மாற்றப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று பொது போக்குவரத்தை பிரபலப்படுத்தி வரும் சத்யபிரியன் காமராஜ் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: வன்னியா்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி குடும்பத்துடன் கடிதம்!!

மேலும், இதுக்குறித்து டிஎன்எஸ்டிசி அதிகாரிகள் கூறுகையில், சில சமயங்களில், முழு ஏர் கண்டிஷனிங் யூனிட்டும் செயலிழந்துவிடுவதால் பேருந்துக்குள் காற்றோட்ட வசதி இல்லாமல் போகிறது. பயணிகள் புகார் செய்யத் தொடங்கியதால், ஏசிகள் அகற்றப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் காற்றோட்டம் இல்லாததால் பஸ்கள் சிறிது நேரத்தில் அடைத்து விடுகின்றன. பேருந்து உற்பத்தியாளருடன் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்கள் இல்லாததால், டிப்போக்களில் உள்ள பொறியாளர்கள் மற்றும் மெக்கானிக்கள் இந்த சிக்கல்களைச் சரிசெய்ய இருப்பு நிதியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிதி நெருக்கடியால், பேருந்துகள் பயனற்று கிடக்கின்றன. இதை தவிர்க்க, இந்த பேருந்துகளை பயன்படுத்த ஏசி இல்லாத பேருந்துகளாக மாற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். 

click me!