கார்த்திகை தீபத்திருவிழா: 4089 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By Velmurugan s  |  First Published Dec 7, 2024, 5:19 PM IST

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சென்னை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கார்த்திகை மாதம் மகா கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற 13ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மகா கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த ஆண்டு மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த அண்டு சென்னை, பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!