Group 2 TNPSC Update : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இரண்டு குறித்த அறிக்கை தற்பொழுது வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளில் அடங்கிய பதவிகளுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதன்படி முதன்மை எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்காக தற்காலிகமாக 327 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாக நேரடி தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
'கண்டா வரச் சொல்லுங்க': அதிமுகவை ஓவர்டேக் செய்த திமுக!
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 327 பேருக்கு நேர்முக தேர்வுகள், பிப்ரவரி 12ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு மருத்துவ சாதனை பணியில் அடங்கிய மருத்துவ சோதனை ஆய்வுக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பகுதிக்கான தேர்வு கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற்று முடிந்தது.
அதில் தற்காலிகமாக தேர்வாகியுள்ள 126 பேரின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குரூப் 2 தேர்வில் தற்காலிகமாக தேர்ச்சி பெற்றுள்ள அந்த 327 பேர் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடக்கின்ற நேர்முகத் தேர்வில் பங்கு பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
DMK vs BJP : அமலாக்கத்துறை கதவை தட்டும் என எச்சரிக்கை விடுத்த அண்ணாமலை... பதிலடி கொடுத்த துரைமுருகன்