டிஎன்பிஎஸ்சி எழுத போறீங்களா..? அப்ப கட்டாயம் இதை தெரிஞ்சுக்குங்க…

By manimegalai aFirst Published Sep 21, 2021, 8:44 AM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 உள்பட அனைத்து தேர்வுகளையும் எப்போது நடத்தலாம் என்பது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 உள்பட அனைத்து தேர்வுகளையும் எப்போது நடத்தலாம் என்பது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அண்மைக்காலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஆனாலும் தேர்வு பற்றிய அறிவிப்பு எப்பிடியாவது வெளியாகும், அரசு வேலைக்கு தயாராகி விடலாம் என்று இன்னமும் லட்சக்கணக்கானோர் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை நடத்தலாம் என்று டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அநேகமாக நாளை இதுபற்றி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் என்ன செய்யலாம்? தேர்வுக்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடப்பாண்டு அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி சேர்க்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் நாளை நடக்க உள்ள கூட்டம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!