20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!!

By Narendran SFirst Published Mar 31, 2023, 12:02 AM IST
Highlights

20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேலூர் எஸ்பியாக அசோக்குமாரும், சென்னை ரயில்வே எஸ்பியாக பொன் ராமுவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆசைத்தம்பி திருப்பூர் எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தலைமை அலுவலக எஸ்பியாக ரவிசேகரனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,031 கோடி ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை... மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு எஸ்பியாக முத்துகருப்பனும், ஆவடி ரெஜிமண்ட் மைய எஸ்பியாக ஜானகிராமனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல் ஆணையர் அலுவலக எஸ்பியாக மங்களேஸ்வரனும், சென்னை பயிற்சி கல்லூரி எஸ்பியாக சந்திரமவுலியும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பியாக மாரிராஜனும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக மோகன் நவாஸும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற நடவடிக்கை... அமைச்சர் கே.என்.நேரு தகவல்!!

சென்னை டிஜிபி அலுவலக எஸ்பியாக சுப்புராஜும், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் சென்னை எஸ்பியாக கெங்கைராஜும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

click me!