மருத்துவ படிப்பில் 85% இட ஒதுக்கீடு ரத்து - தமிழக அரசு மேல்முறையீடு!

First Published Jul 17, 2017, 3:45 PM IST
Highlights
TN govt appeal in SC


மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மருத்துவபடிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசுஅரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தஞ்சை சிபிஎஸ்சி மாணவர் தர்னீஸ் குமார் தாயார் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழக எதிர்கட்சிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் இன்று மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை எனவும், அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!