”ஸ்டாலினுடன் கவுரவ பிரச்சனை இல்லை” - தமிழக அரசு விளக்கம்!!

 
Published : Aug 07, 2017, 02:57 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
”ஸ்டாலினுடன் கவுரவ பிரச்சனை இல்லை” - தமிழக அரசு விளக்கம்!!

சுருக்கம்

TN government statement about stalin

கட்சராயன் ஏரி விவகாரத்தில் ஸ்டாலினுடன் எந்த கவுரவ பிரச்சனையும் இல்லை எனவும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே தடுத்து நிறுத்தப்பட்டார் எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுகவினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரினர். அந்த ஏரிக்குள் அதிமுகவினர் கரைகளை உடைத்து சேதப்படுத்தி சட்டவிரோதமாக மண் அள்ளிச் செல்வதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின், கட்சராயன் ஏரியை பார்வையிட சேலம் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வார சென்ற மு.க.ஸ்டாலினை தடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சராயன் ஏரி விவகாரத்தில் ஸ்டாலினுடன் எந்த கவுரவ பிரச்சனையும் இல்லை எனவும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவே தடுத்து நிறுத்தப்பட்டார் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. 

மேலும், அரசு விவகாரத்தில் தலியிட்டு ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார் எனவும் குற்றம் சட்டியது. 

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!