தகவல் கொடுத்தால்..10,000 ரூபாய் பரிசு.. திருவள்ளூர் எஸ்.பி அறிவிப்பு

Published : Dec 17, 2021, 05:27 PM IST
தகவல் கொடுத்தால்..10,000 ரூபாய் பரிசு.. திருவள்ளூர் எஸ்.பி அறிவிப்பு

சுருக்கம்

கஞ்சா விற்பனை குறித்து தகவல் தந்தால் 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.  

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை என்பது அதிகரித்துவரும் நிலையில், அதை தடுப்பதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில், தமிழ்நாடு டிஜிபி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த அதிரடி ஆப்ரேஷனில் கஞ்சா விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டனர். 

குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர்கள், வழக்குகளில் தேடப்பட்டுவந்தவர்கள் என மாநிலம் முழுவதும் தயாரிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் போலீசார் களமிறங்கினர். யாரும் எதிர்பாராத நள்ளிரவு நேரத்தில் சோதனையை தொடங்கிய காவல்துறையினர்,  வடசென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிரடியாக ரவுடிகளை கைது செய்தனர். ரவுடிகளின் வீடுகளில் நடத்திய ரெய்டில் அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையில் தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டனர். இந்த ஸ்டாமிங் ஆப்ரேஷனில் ஒரே நாள் இரவில் சுமார் 600க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர். கைதான ரவுடிகளிடமிருந்து அரிவாள்கள்,  துப்பாக்கிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஆயுதங்களும் போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இறுதியாக, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் 'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் 972 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களிடமிருந்து 1,117 ஆயுதங்கள், 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக தகவல் கொடுத்தால் 10,000 ரூபாய் பரிசு வழங்கபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்து கஞ்சா விற்பனை தொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களை காவல்துறையிடம் கொடுப்பார்கள் என்னும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக மாவட்ட மக்கள் புகாரளிக்க, 63799 04848 என்ற வாட்ஸ் அப் அலைபேசி எண்ணும் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி தொகுதிகளில் எத்தனை லட்சம் வாக்காளர்கள்? முழு விவரம் இதோ!
அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்