பீப் பிரியாணிக்கு பெருகிய ஆதரவு.. ஆளை விடுங்க சாமி.. Briyani fest-ஐ நிறுத்திய திருப்பத்தூர் கலெக்டர்

Published : May 12, 2022, 06:02 PM ISTUpdated : May 12, 2022, 06:05 PM IST
பீப் பிரியாணிக்கு பெருகிய ஆதரவு.. ஆளை விடுங்க சாமி.. Briyani fest-ஐ நிறுத்திய திருப்பத்தூர் கலெக்டர்

சுருக்கம்

மாட்டுக்கறி பிரியாணிக்கு ஆதரவு பெருகியதையடுத்து, நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவை மழையின் காரணமாக ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பீப் பிரியாணிக்கு அனுமதி மறுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் முதல்முறையாக நாளை முதல் 13, 14. 15 உள்ளிட்ட 3 நாட்கள்  ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா  மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவின் பேரில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த்து. புவிசார் குறியீடு பெறுவதற்காக  மூன்று நாட்கள் நடத்தப்படும் பிரியாணி திருவிழா முதல் முறையாக நடத்துவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த திருவிழாவில் அதிக அளவில் விரும்பி உண்ணக்கூடிய மாட்டு இறைச்சி பிரியாணி இல்லாமல் இத்திருவிழா நடைபெற வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டம் தெரிவித்துள்ளளர். பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கவில்லையென்றால் பிரியாணி இலவசமாக தருவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பிஐ, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மழையின் காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைப்பு

இதேபோல் இந்து  முன்னணி  கட்சியினர் பிரியாணி திருவிழா நடைபெறுவது போல சைவ உணவு திருவிழா நடத்தப்பட வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்தநிலையில் இரண்டு தரப்பிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு என்ன முடிவு போகிறது என அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் நாளை முதல் 13,14,15 மூன்று நாட்கள் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவை கனமழை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!
மதுரை விழிப்புடன் இருக்கும் மண்.. கோயில் நகரம் தொழில் நகராகவும் மாறணும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!