காரைக்குடி, மகாபலிபுரம் வழியாக ‘தி மகாராஜாஸ்’ சொகுசு ரெயில் ‘நகரும் அரண்மனை’ யின் டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Asianet News Tamil  
Published : May 26, 2017, 08:38 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
காரைக்குடி, மகாபலிபுரம் வழியாக ‘தி மகாராஜாஸ்’ சொகுசு ரெயில் ‘நகரும் அரண்மனை’ யின் டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

Ticket rate for Travel in luxury like a king in Maharajas Express

கடந்த 30 ஆண்டுகளாக, வடமாநிலங்களில் ஆக்ரா, ராஜஸ்தான், மும்பையை மட்டுமே வலம் வந்த   ‘தி மகாராஜாஸ்’ எனும் அரண்மனை போன்ற அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு ரெயில், தென் மாநிலங்களை இணைத்து முதன் முதலாக பயணத்தை தொடங்குகிறது.

ஜூலை 1-ந்தேதி

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கி, காரைக்குடி வழியாக மகாபலிபுரம், கர்நாடகாவின் ஹம்பி, கோவா செல்கிறது. இந்த முதல் பயணத்தை வரும் ஜூலை 1-ந்தேதி தி மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடங்குகிறது. இதற்கு ‘சதர்ன் ஜூவல்ஸ்’  எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘ஒன் டு ஒன்’ இலவசம்

இதில் ஒரு நபருக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால், உடன் ஒருவரை இலவசமாக அழைத்து வரலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை தோற்றம்

இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அதி நவீன சொகுசு ரெயிலான தி மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளது. அதன் உள்புற தோற்றம், வடிவமைப்பு, வசதிகள், என அரண்மனைபோன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த ரெயிலில் 2 புதிய ரெஸ்டாரண்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த ரெயிலிலேயே திருமணம் செய்து கொள்ளவும் ஏராளமானோர் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.

88 பயணிகள்

நாட்டில் செல்லும் அனைத்து ரெயில்களிலும் மிகவும் அதிக கட்டணம் வசூலிக்கும் ரெயில் இந்த மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலாகும். அந்த அளவுக்கு இதில் கட்டணம் மிக மிக அதிகமாகும். இந்த ரெயிலில் மொத்தம் 88 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

லட்சக்கணக்கில் கட்டணம்

8 நாள் சுற்றுலாவுக்கு டீலக்ஸ் அறைக்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.3.77 லட்சம் கட்டணமும், உயர்பிரிவு வகுப்பு(பிரசடென்சியல் சூட்) கட்டணமாக ரூ.17.33 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஜூலை 1-ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கி, காரைக்குடி வழியாக மகாபலிபுரம், கர்நாடகாவின், மைசூரு, ஹம்பி, கோவா சென்று மும்பையில் நிறைவடைகிறது.

இலவசம்

இந்த சொகுசு  பயணத்தில் சிறப்பு உணவு, சுற்றுலா தளங்களை பார்வையிடுதல்,மது, நட்சத்திர விடுதிகளில் தங்குதல், உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். அதேசமயம், இதில் குறிப்பிட்ட இடங்கள் வரை சுற்றிப்பார்க்கவும் பயணிகளுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

சலுகை

அதாவது, ஒருவர் திருவனந்தபுரம் முதல் மும்பைவரை செல்லாமல், காரைக்குடி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.32 ஆயிரத்து 250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் குறைக்கப்படாது.

கார்ப்பரேட் நிறுவனங்கள்

மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இந்த சொகுசு ரெயிலில் கூட்டங்கள் நடத்தவும், வாரியக் கூட்டம் நடத்தவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக அரங்குகள், எல்.சி.டி. தொலைக்காட்சிகள், என ஒரு அரங்கு போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டணம்

இதில் ‘சூட்’ அறைக்கு ரூ.10 லட்சமும், பிரெசிடென்சியல் அறைக்கு ரூ.17.22 லட்சமும், ஜூனியர் அறைக்கு ரூ.6.5 லட்சம் முதல் ரூ.7.23 லட்சமும், டீலக்ஸ் கேபினுக்கு ரூ.3.77 ல ட்சம் முதல் ரூ.5 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!