ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிகொலை செய்யப்பட்ட விவகாரம் - 3 பேர் நீதிமன்றத்தில் சரண்...!

Asianet News Tamil  
Published : Oct 20, 2017, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிகொலை செய்யப்பட்ட விவகாரம் - 3 பேர் நீதிமன்றத்தில் சரண்...!

சுருக்கம்

Three persons have been surrendered in the court in a case filed by a real estate chancellor in Chitambaram near Chidambaram.

சிதம்பரம் அருகே நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 

சிதம்பரம், சிவசக்தி நகர் 4 வது கிராஸில் வசித்து வந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பழனிசாமி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து கிளம்பி இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். 

அப்போது சிதம்பரம் அருகே கூத்தன்கோயில் கிராமத்தில் மர்ம நபர்கள் சிலர் பழனிசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து ஓடி விட்டனர். இதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மாவட்ட போலீஸ் எஸ் பி .விஜயகுமார்  உத்தரவின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க தனி படை அமைக்கப்பட்டது. 

ஆனால் இன்று இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு  தலைமறைவாக இருந்த சண்முகபிரகாஷ், அரஷாத் அலி, மனோஜ் ஆகிய 3 பேர்கள் உளுந்தூர்பேட்டை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?