பிட்டு படத்தை வெளியிடுவேன்! பணம் கேட்டு தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய அகோரமை தட்டித்தூக்கிய போலீஸ்!

By vinoth kumar  |  First Published Mar 1, 2024, 2:10 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் நிர்வாகம் செய்து வருகிறார்.


போலி வீடியோ தயாரித்து ஆதீனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் அகோரமை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: தருமபுரம் ஆதீனம்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவராக உள்ள அகோரம் ஆதீனத்தை ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு சிலர் மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி அளித்த புகாரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினோத் (32), குடியரசு (39 ) , விக்னேஷ் (33), நெய் குப்பத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ( 28 ) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதையும் படிங்க:  தருமபுரம் ஆதினத்தின் ஆபாச வீடியோ.!! பணம் கேட்டு கூட்டாக மிரட்டிய பாஜக, திமுக நிர்வாகிகள் - வெளியான பகீர் தகவல்

மேலும் இந்த வழக்கில்  பாஜக மாவட்ட தலைவர் அகோரம், அமிர்த விஜயகுமார், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில்,  தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரமை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

click me!