தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் திடீர் திருப்பம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

First Published Jun 25, 2018, 4:39 PM IST
Highlights
Thoothukudi firing case The Madras High Court ordered action


சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் துப்பாக்கிச்சூடு தொடர்பான 10 வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. அதேபோல் துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னையில் 6 வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 

மொத்தம் 16 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவை அடுத்து வழக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். 

100-வது நாள் போராட்டத்தின் போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது எதிர்பாரத விதமாக வன்முறையாக மாறியது. அப்போது போலீசார் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுமி உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்கடி  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வழக்கு, மற்றும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய ஏராளமான வழக்குகள் மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

click me!