நாங்க போராடி தான பாத்திருக்கீங்க? இப்போ தெரியும் நாங்க யாருன்னு... சத்தமே இல்லாமல் மௌனமாக வெடிக்கும் நீட் புரட்சி!

 
Published : May 04, 2018, 05:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
நாங்க போராடி தான பாத்திருக்கீங்க? இப்போ தெரியும் நாங்க யாருன்னு... சத்தமே இல்லாமல் மௌனமாக வெடிக்கும் நீட் புரட்சி!

சுருக்கம்

This is the State of Tamil Nadu You write in other States and students extend a helping hand for people

நீட் தேர்வுக்காகத்தான் வாதாடி மாணவர்களுக்கு நல்லதை செய்யவில்லை, தேர்வு மையத்திற்காக வாதாடி வெல்ல முடியவில்லை, மக்களுக்கான இந்த அரசாங்கம் மக்களின் இந்த அத்தியாவசியமான ஒன்றைக்கொட பெற்றுத்தர இப்படி காலம் தாழ்த்தி வருவது வேதனையானது. அரசாங்கம் செய்யும் செலவை தனி மனிதர்கள் பணம் கொடுத்து விமான செலவிற்கு ஏற்பாடு செய்யும் போது, வெறும் ஆயிரம் ருபாய் அது இது என தெளிவான அறிக்கையே இன்னும் வெளியிடவில்லை. மக்கள் மட்டுமே மக்களுக்கு உதவ வேண்டும், அரசு எதுவும் செய்யாது மக்களை மக்கள்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என நன்றாக புரியவைத்துவிட்டது இந்த அரசு என சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் போராடியும் எதையும் பெறமுடியாமல் தவிக்கும் தமிழக  மக்களோ அரசாங்கமா? அவங்க செய்வாங்கன்னு நம்பிக்கையே இல்லை என களத்தில் தாங்களே குதித்துள்ளனர். வெளிமாநிலத்திற்கு தேர்வெழுத செல்லும் மாணவர்களுக்கு  உதவ தமிழர்கள் ஒன்றாக கரம் கோர்த்து இருக்கிறார்கள். பயண செலவு தொடங்கி தங்குமிடம், உணவு வரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உதவிக் கரம் நீட்டியுள்ளனர்.

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் அங்குதான் எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்குவேறு மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் ராஜஸ்தான், கேரளா, குஜராத், உபி எல்லாம் சென்று தேர்வு எழுத வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.  இது மாணவர்களுக்கு பெரிய சிரமத்தை உருவாக்கியுள்ளது.

தஞ்சையில் இருக்கும்  ஒரு மாணவி தேர்வு எழுத ராஜஸ்தான் செல்ல வேண்டிய நிலைமை உருவாகி உள்ளதால், இனி ரயில் புக் செய்து செல்ல முடியாது, தட்கலில் கிடைப்பதும் உறுதியா சொல்லமுடியாது. அப்படியே முன்பே முன்பதிவு செய்து இருந்தாலும் 30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிக பணம் கொடுத்து விமானத்தில் செல்ல வேண்டும் என சிபிஎஸ்இ போர்ட் தமிழக மாணவர்களுக்கு பரிசளித்துள்ளது.

ஆனால், நம்ம யாரு? போராட்ட குணம் தானே தமிழர்களின் பலமே. இந்த முறை போராட்டமல்ல,. ஆமாம் நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்ய முன் வந்து இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள், நாங்கள் செய்கிறோம், இத்தனை பேருக்கு நாங்கள் உதவ முடியும் என்று எல்லோரும் ஒன்றாக திரண்டு உதவிக்கு வந்துள்ளனர்.  டிவிட்டரில், பேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப் குழுக்களிலும் இப்படி உதவிக்காக வந்து இருக்கிறார்கள். மத்திய அரசின் குரூரமான மனப்பான்மையால் எந்த மாணவனின் கல்வியும் தடைபட்டுவிடக் என்ற கோபத்துடன் ஒவ்வொருவரும் உதவிக்கு கிளம்பியுள்ளனர்.  இதுவரைக்கும் நாங்கள் போராடித்தானே பார்த்திருக்கிறீர்கள்? எங்களோட உதவி செய்யும் குணத்தை பார்த்ததில்லையே என இப்போ தெரியும் நாங்க யாருன்னு, என சத்தமே இல்லாமல் மௌனமாக வெடிக்கும் நீட் புரட்சியை தமிழத்தில் உருவாக்கியுள்ளனர்.

NEET பாலக்காடு , எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் whatsapp இல் அனுப்பவும் . தொடர்புக்கு- Kasthuri , jai 9789895953. Please share

இராஜஸ்தானில் 'நீட்' தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு வாகனவசதி தங்குமிட வசதி செய்து கொடுத்து தேர்வு மையம் வரை அழைத்துச் சென்று உதவ "நாம் தமிழர் டெல்லி" தம்பிகள் தயாராக உள்ளார்கள். எந்த உதவியாயினும் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள். சக்தி - 9717974572 ஜெகதீஸ்வரன் - 8800690700

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநில மையங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபு காந்தி! உதவி தேவைப்படுவோர் 9751172164 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்!

கேரளா மற்றும் ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்! உதவி தேவைப்படுவோர் 9677208927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்!

நாகை தொகுதியில் நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல உதவி தேவைப்படும் மாணவர்கள் உடனே என்னை அணுகவும்- தமிமுன் அன்சாரி #NEET #NEET2018

NEET பாலக்காடு , எர்ணாகுளம் மற்றும் கேரளா முழுவதும் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் whatsapp இல் அனுப்பவும் . தொடர்புக்கு- velu 97511700777 . 9980649416 Please share

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் அனைத்துவிதமான உதவிகளை செய்ய தயாராக உள்ளது; > தொடர்பு கொள்ள எண்கள்: முருகானந்தம்- 9790783187, சௌந்தரவல்லி - 8696922117, பாரதி - 7357023549 #NEETExam #NEET2018

குமரி மாவட்டத்தில் இருந்து #நீட்_தேர்வுக்கு தயாராகி... #கேரளாவுக்கு தேர்வு எழுத செல்ல வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களுக்கு... குமரி மாவட்ட #நாம்தமிழர்_கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்து தருகிறோம்... தொடர்புக்கு : 8056850862, 9790179914

 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!