வருமான வரித் துறையின் முக்கிய குறிக்கோளே இதுதான் - இணை ஆணையர் விளக்கம்...

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 27, 2018, 10:22 AM IST

வருமான வரி செலுத்தாதவர்களை வரி செலுத்த வைப்பதுதான் வருமான வரித் துறையின் குறிக்கோளாகும் என்று விழுப்புரம் மாவட்ட வருமான வரித் துறை இணை ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.
 


விழுப்புரம்

வருமான வரி செலுத்தாதவர்களை வரி செலுத்த வைப்பதுதான் வருமான வரித் துறையின் குறிக்கோளாகும் என்று விழுப்புரம் மாவட்ட வருமான வரித் துறை இணை ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார்.

Latest Videos

விழுப்புரம் மாவட்ட வருமான வரித் துறையும், அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பும் ஒன்றுசேர்ந்து 'வியாபாரிகள் வருமான வரிச் செலுத்துவது' தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நேற்று விழுப்புரத்தில் நடத்தின.

இந்தக் கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். விழுப்புரம் மாவட்ட வருமான வரித் துறை இணை ஆணையர் சிவக்குமார் இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட வருமான வரித் துறை இணை ஆணையர் சிவக்குமார்,  "காலம் கடந்து வருமான வரி செலுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள், இதனால் வியாபாரிகள் செலுத்த வேண்டிய அபராதம், இதனைத் தவிர்க்க முன்கூட்டியே வருமான வரிச் செலுத்துவது" என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 

வருமான வரி செலுத்தாதவர்களை வரி செலுத்த வைப்பதுதான் வருமான வரித் துறையின் குறிக்கோளாகும் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் ஆனந்த தீர்த்தன், செங்குட்டுவன் ஆய்வாளர் ரவி, வணிகர் சங்கக் கூட்டமைப்பின் மாவட்டப் பொருளாளர் கலைமணி, தலைமை நிலையச் செயலாளர் முகமது அக்பர் அலி, அமைப்புச் செயலாளர் நிர்மல் ஆகியோர் பங்கேற்றனர்.

click me!