TN Election Results: தவெகவுக்கு விசிக ஆதரவு.. மெஜாரிட்டி கிடைச்சாச்சு.. முதல்வராகும் விஜய்.. திருமா போட்ட கண்டிஷன் இதுதான்!

Published : May 09, 2026, 05:05 PM ISTUpdated : May 09, 2026, 05:54 PM IST
TN Election Results

சுருக்கம்

TN Election Results: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க விசிகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் விஜய் முதல்வராக பதவியேற்க எந்த சிக்கலும் இருக்காது.

தமிழக சட்டப்பேரவை 2026 தேர்தலில் முதன் முதலில் கால்பதித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவையாக இருந்தது. இதனைத் தொடர்ந்து முதலில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். இதன்பிறகு இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 இடங்கள் எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4 எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தனர். இதனால் தவெக மெஜாரிட்டி பெற 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது.

தவெகவுக்கு விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு

இதனால் தவெக சார்பில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் ‍பேசப்பட்டது. விஜய் திருமாவளவனிடம் போன் மூலம் பேசியதாகவும் தகவல்கள் கூறின. தங்களின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து நாளை (அதாவது இன்று) அறிவிப்பதாக விசிக கூறியிருந்தது. இந்த நிலையில், இடதுசாரி கட்சிகளை போன்று விசிகவும் தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவன், தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரசார பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் வழங்கினார். இதேபோல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் தவெகவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

விஜய் முதல்வராக பதவியேற்பார்

இதன்மூலம் தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை கடந்து 120 என்ற இடங்கள் என்ற ஆதரவு கிடைத்துள்ளது. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள் அனைத்தும் திமுக கூட்டணி கட்சிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் ஆளுநரை 3 முறை சந்தித்தும் தவெக ஆட்சி அமைக்க அவர் அழைக்கவில்லை. இப்போது விஜய்க்கு பெரும்பான்மை கிடைத்து இருப்பதால் அவர் இன்று மாலையே ஆளுநரை சந்திக்க இருக்கிறார். அதன்படி ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பார். அதன்படி விஜய் முதல்வராக பதவியேற்பார்.

விஜய்க்கு திருமாவளவன் போட்ட கண்டிஷன்

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வரக்கூடாது. ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு என இடதுசாரி கட்சிகள் கூறியிருந்தன. இதேபோல் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்கப்பதற்காவும், குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகவும் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதே வேளையில் தாங்கள் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எந்த நிலையிலும் மதவாத சக்திகளை விஜய் அனுமதிக்கக்கூடாது என விஜய்க்கு திருமாவளவன் கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆளுநருக்கு வழிக்கி கொண்டு தவெக எடுத்த அதிரடி முடிவு.. அப்படினா.. விஜய் முதல்வராகுவது உறுதி?
சென்னையில் மழை | வேளச்சேரி பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை - நேரடி காட்சிகள்!