
மின்சார பராமரிப்பு பணிகள்
மின் பாதையில் ஏற்படும் பழுதுகள், புதிய மின் மாற்றி அமைப்பது என மின்வாரியம் சார்பாக பராமரிப்பு பணிகள் தினந்தோறும் நடைபெறும். இந்த நிலையில் திங்கட்கிழமையான இன்று மின் தடை செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (21.08.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் .பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி,
நாப்பாளையம்:
விச்சூர், சிட்கோ தொழிற்பேட்டை, எழில் நகர், குளக்கரை, வெள்ளாங்குளம், மணலி நியூ டவுன், பொன்னியம்மன் நகர், சுப்ரமணி நகர், நாப்பாளையம், கொண்டக்கரை, வெள்ளிவயல்ச்சாவடி, சின்னேசங்குழி மற்றும் குருவிமேடு போன்ற இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
இடி மின்னலோடு 7 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும்..! பொதுமக்களை அலெர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்