
கடந்த 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்தன. இதில் ஏராளமான வீடுகள் மூழ்கின. பலர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான பொருட்கள் தண்ணீரில்
அடித்து செல்லப்பட்டன. இதனால், மக்கள் கடும் அவதியடைந்தனர். வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். பின்னர், நாளடைவில் நிலைமை சீரடைந்தது.
ஆனால், தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. தண்ணீர் பஞ்சம் அப்படியே இருந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட தானே புயல் லேசான மழையை கொடுத்தது. அதிலும் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், தமிழக மக்கள், குறிப்பாக சென்னை மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
இதை தொடர்ந்து டிசம்பர் 12ம் தேதி ஏற்பட்ட வர்தா புயல், அனைத்து பகுதிகளையும் வாரி சுருட்டி சென்றது. விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறின. பயிர்கள் கருகி நாசமானது. மரங்கள் வேரோடு சாய்ந்தன.
அதன்பின்னர், தமிழகத்தில் மழை பெய்யாமல் உள்ளது. இதனால், வரும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும் என்ன வழி என விழி பிதுங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்து வந்தது. ஆனால், அந்த மழையும் போதுமானதாக இல்லை. ஏரிகள், குளங்கள், ஆறுகள் அனைத்தும் பாலைவானம் போலவே காட்சி அளிக்கிற
இந்நிலையில், வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில்
வறண்ட வானிலை காணப்படும். தென்தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றனர்.