2 பாதாள அறைகள்...! செக் பண்ணும் போது...பார்த்தது என்ன? வெளியில் வந்தது என்ன...?

 
Published : Nov 14, 2017, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
2 பாதாள அறைகள்...! செக் பண்ணும் போது...பார்த்தது என்ன? வெளியில் வந்தது என்ன...?

சுருக்கம்

there is 2 separate room inside the dinakaran farm house?

2 பாதாள அறைகள்...! செக் பண்ணும் போது....பார்த்தது என்ன? வெளியில் சொன்னது என்ன...?

வெளியே பார்ப்பதற்கு பக்கா தோட்டம் போல இருக்கிறது தினகரனின் பண்ணை வீடு.ஆனால் உள்ளே சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியதில் 2 பாதாள அறைகளை பார்த்து வியந்துள்ளனர்.

அதாவது ரூ.22,000 கோடி அளவுக்கு வைரங்களாக மாற்றப்பட்டு ஆங்காங்கே பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் ஒன்று தான் இந்த பாதாள அறைகளில் இருக்கும்  என  கூறப்படுகிறது.

பாதாள அறைக்கு எலக்ட்ரானிக் பூட்டா?

பாதாள அறையில் ஒருவேளை வைரநகைகளை மீட்டாலும் இதை வருமான வரித்துறையினர் வெளியே சொல்வார்களா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

இந்த பாதாள அறைகளுக்கும் எலக்ட்ரானிக் பூட்டு போடப்பட்டிருக்கிறது  என்று கூறப்படுகிறது. பெரும் போராட்டத்துக்கு பின்னரே இந்த எலக்ட்ரானிக் பூட்டு திறக்கப்பட்டதாம். அந்த அறையில் கிடைத்த ஆவணங்கள், பொருட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை மலைக்க வைத்துவிட்டதாம்.இதனை தொடர்ந்து  இரவோடு இரவாக அந்த அறையை சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி உள்ளனர்.

ஞாபகம் இருக்கிறதா?

ரகசிய பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறை இருப்பதால்தான் அவசரம் அவசரமாக செய்தியாளர்களை அழைத்து உரம், சாணி என தினகரன் உளறி கொட்டியது நினைவிற்கு வரும்

அதாவது ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஒருகட்டத்துக்கு மேல் சொத்துகளை வாங்கிக் குவிப்பதை கைவிட்டு விட்டு இருப்பவற்றையெல்லாம் வைரங்களாக மாற்றி பதுக்கத் தொடங்கினராம்.

இந்தியாவிலேயே முதல் முறையாக  இதுவரை  நடக்காத  அளவிற்கு நடந்த முதல் மிக பெரிய  வருமான வரி சோதனை  இது என்பது  குறிப்பிடத்தக்கது.ஆனால் இதிலிருந்து என்னவெல்லாம்  கைப்பற்றினார்கள்? அதன் மதிப்பீடு என்ன? என்பதெல்லாம் வருமானவரித்துறையினர் அறிக்கை கொடுத்தால் தான் முழு விவரம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு