
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள அச்சரபாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரபாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூரில் அரசு மதுபானக்கடை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கமாக பணியாளா்கள் தங்கள் பணியை முடித்து வீடு திரும்பியுள்ளனா்.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இந்தக்கடையின் பூட்டை உடைத்து, 60 பெட்டிகளில் இருந்த சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரத்தி காவல்துறையினர், காெள்ளையா்களை பற்றி தீவிர விசாரணை மேற்காண்டு வருகின்றனா்.