மின் கட்டண கணக்கெடுக்க சென்ற இடத்தில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஊழியர்...கற்பழிக்க முயற்சி! ... மன்னார்குடியில் நடந்த அதிர்ச்சி!

Asianet News Tamil  
Published : Jun 21, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
மின் கட்டண கணக்கெடுக்க சென்ற இடத்தில் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஊழியர்...கற்பழிக்க முயற்சி! ... மன்னார்குடியில் நடந்த அதிர்ச்சி!

சுருக்கம்

the young woman hugged and kissed the electrician

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மின்வாரிய ஊழியர் கட்டிப்பிடித்து முத்தமிட்டதுடன் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் மன்னார்குடி டவுன் மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினர் கள்ளிக்குடியில் வசிக்கும் நிலையில், இவர் மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம் மன்னார்குடியில் உள்ள ஒரு வீட்டிற்கு மின் கட்டண  கணக்கெடுப்பு செய்ய ஜெயராமன் சென்றார். அந்த வீட்டில் 21 வயது  பெண்ணும், அவரது குழந்தையும் இருந்தனர். இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றிருந்தார்.

அப்போது, அங்கு மின் மீட்டர் வீட்டிற்குள் இருந்ததால் உள்ளே சென்ற ஜெயராமன், கட்டணம் 520 வந்துள்ளது என அந்த பெண்ணிடம் கூறினார். பின்னர் கட்டணத்தை 100 என்று குறைத்து பதிவு செய்வதுடன், இதுபோலவே தொடர்ந்து குறைவாகவே பதிவு செய்வதாகவும் கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் உண்மையான தொகையை பதிவு செய்யும்படி கூறியுள்ளார்.

அப்போது திடீரென்று அந்த இளம்பெண்ணை அணைத்து முத்தம் கொடுத்ததுடன், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட ஜெயராமன் முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளி, நடந்தவை குறித்து கணவரிடம் செல்போனில் கூறினார்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசில் அந்தப்  பெண்ணின் கணவர் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி அசோகன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.  இதனையடுத்து உத்தரவின்பேரில் ஜெயராமன் மீது போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!