கணவர் வீட்டில் சித்தரவதை...! தாய் வீட்டுக்கு வந்த பெண் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்த பரிதாபம்!

 
Published : Jan 15, 2018, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
கணவர் வீட்டில் சித்தரவதை...! தாய் வீட்டுக்கு வந்த பெண் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்த பரிதாபம்!

சுருக்கம்

The woman suicide with the family

திருமணம் ஆன 6 மாதத்திலேயே, பெண் ஒருவர் பெற்றோர் மற்றும் தங்கையுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகையில் நடந்துள்ளது. 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

நாகை மாவட்டம், தரங்கம்பாடி, ஆக்கூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (55). இவருக்கு மனைவி குணசுந்தரி (50), சரண்யா, சுகன்யா, என்று இரு மகள்கள்.

கண்ணன், தனது வீட்டின் கீழ்ப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். வீட்டின் மேல் பகுதியில் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக மூத்த மகள் சரண்யாவுக்கும், கரூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 

இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு சரண்யா, தாய் வீட்டுக்கு வந்துள்ளார். சரண்யாவுக்கும், கணவரின் வீட்டாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர், தாய் வீட்டுக்கு வந்துள்ளார். சரண்யா, கணவர் வீட்டில் இருந்தபோது அவருக்கு பல்வேறு சித்தரவதைகளை அனுபவித்துள்ளார். 

தாய் வீட்டுக்கு வந்த சரண்யா, தனது நிலையை பெற்றோரிடம் கூறியுள்ளார். தீக்காயங்களுடன் வந்த மகளின் நிலையைக் கண்டு வேதனை அடைந்த அவரின் பெற்றோர், சரண்யாவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இதன் பிறகு, சரண்யா கணவர் வீட்டுக்கு செல்லவில்லை. கடந்த ஒன்றரை மாதமாக கண்டு கொள்ளாத சரண்யாவின் கணவர் விக்னேஷ்வரன், நேற்று முன்தினம் போகிப்பண்டிகையொட்டி தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கும் சரண்யாவுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. இதன் பிறகு, விக்னேஷ்வரன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். 

இந்த நிலையில் போகிப் பண்டிகை அன்று மாலை, மளிகைக் பொருட்கள் வாங்குவதற்காக கண்ணனின் கடைக்கு சிலர் வந்துள்ளனர். ஆனால் கடை திறக்கப்படாமல் பூட்டி இருந்தது. இதையடுத்து கண்ணனின் வீட்டுக்கு சிலர் சென்று பார்த்துள்ளனர். அப்போது கண்ணன், அவரது மனைவி 2 மகள்கள் ஆகியோர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அவர்கள், செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சரண்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர். கணவர் குடும்பத்துடனான பிரச்சனைதான் இவர்களின் தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?
ஆம்னி பேருந்தை அடிச்சு தூக்கிய அரசு பேருந்து.. இவ்வளவு வசதிகள் இருக்கா? வியப்பில் பொதுமக்கள்