சொத்தை தன்னுடைய பெயரில் எழுதி கேட்டு கணவரை வீட்டில் உள்ள தனி அறையில் சோறு தண்ணி இல்லாமல் அடைத்து வைத்தும், சூடு போட்டும் சித்ரவதை செய்த கொடுமையான மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற ரமேஷ்க்கு வயது 50, இவரது மனைவி பெயர் லலிதா இவருக்கு வயது 45. இந்த தம்பதிக்கு மகன் ஸ்ரீநாத். நாராயணசாமி பெயரில் ரூ.2 கோடிக்கு பரம்பரை சொத்து உள்ளது. மாதா மாதம் வீட்டு வாடகையாக ரூ.30 ஆயிரம் வருகிறது.
நாராயணசாமியின் மனைவி மற்றும் மகனும் தினம் தினமும் சொத்தை எழுதி கேட்டுள்ளனர். மனைவி லலிதா உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி வைத்துவிடுங்கள் என்று தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். ஆனால் இதற்கு கணவர் நாராயணசாமி மறுத்து உள்ளார். உன் பெயருக்கு இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பார்க்கலாம் என்று கூறினாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் தினமும் வாக்கு வாதமும் சண்டை நடந்துள்ளது.
இந்நிலையில், கணவர் நாராயணசாமியை அவரது மனைவியும் மகனும் சேர்ந்து வீட்டில் ஒரு அறையில் கடந்த ஒரு வாரமாக வெளியே செல்லவிடாமல் அடைத்து வைத்துள்ளனர். சொத்தை எழுதி கேட்டு உள்ளனர். அப்போதும் கணவர் நாராயணசாமி மறுக்கவே மனைவியும் மகனும் அவரது உடலில் பல இடங்களில் சூடுபோட்டு சித்ரவதை செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணியளவில் மனைவி சித்ரவதை தாங்காமல் சத்தம் கத்தி இருக்கிறார். இந்த அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள நாராயணசாமியின் உறவினர் கோபால் என்பவருக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் சென்னிமலைக்கு விரைந்தார்.
வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாராயணசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவரது உடலில் சூடு போடப்பட்டிருந்ததால் தீக்காயத்துக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பிறகு இது குறித்து சென்னிமலை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு கொடுமை படுத்திய மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தையும் போலீசார் கைது செய்தனர். பிறகு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.