காவிரி ஆற்று வெள்ளத்தால் ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவிலில் 3 நாட்களாக உணவுயின்றி தவித்த ஒரு பசு மற்றும் 2 கன்றுகுட்டிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதை மீட்க நடவடிக்கை எடுத்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், தீயணைப்புத்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே, காங்கயம்பாளையம் காவிரி ஆற்றின் நடுவில், ஸ்ரீ நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. பிரம்மஹத்தி தோஷம் கழிக்க, சிறந்த தலமாக திகழ்ந்து வருகிறது. கோவில் குருக்களுக்கு பக்தர் வழங்கிய ஒரு பசு மாடு கோவில் வளாகத்தில் கடந்த 8 ஆண்டாக இருந்து வருகிறது.இதில்லாமல் நான்கு வயதான ஒரு மாடு, நான்கு மாத கன்று உள்ளது.
கோவில் வளாகத்தை தாண்டி ஆற்று தண்ணீர் வராது என்பதால் பசு மாடுகளை அங்கேயே விட்டு விட்டு சென்று விடுவார். கடந்த 2 நாட்களாக காவிரியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குருக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 2 நாட்களாக பசுக்கள் உணவின்றி தவித்து வந்தன. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இதுதொடர்பாக தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேரிடர் மீட்பு குழு, அதி விரைவு படை வீரர்கள், மாடுகளை மீட்க, உணவு தர ஆய்வு செய்தனர். தண்ணீர் ஓட்டமும் மோசமாக உள்ளதால், பரிசல் செலுத்த முடியவில்லை. மாடுகள் தண்ணீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வந்தது. பிறகு காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்ததையடுத்து உடனடியாக மீட்பு படையினர் விரைந்து பசுக்களை மீட்டனர். பிறகு அவைகளுக்கு உணவு அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.