வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை திமுகவினர் உடனே தொடங்கணும் – எம்எல்ஏ வேண்டுகோள்…

 
Published : Oct 07, 2017, 09:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை திமுகவினர் உடனே தொடங்கணும் – எம்எல்ஏ வேண்டுகோள்…

சுருக்கம்

The voter list verification works will start immediately - MLA request ...

கன்னியாகுமரி

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை திமுகவினர் உடனே தொடங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலர் மனோதங்கராஜ் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டச்  செயலர்  மனோதங்கராஜ்  எம்எல்ஏ நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்:

அதில், “இறுதிச் செய்யப்பட்டுள்ள  வாக்காளர் பட்டியல்  அக்டோபர் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள  தேர்தல் ஆணையம் 31.10.2017 வரை அவகாசம் வழங்கியுள்ளது.

மேலும், அக்டோபர் 8, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.  எனவே கழகத்தினர் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய  அதற்கான படிவங்களை  நிரப்பி  அந்தந்த  மையங்களில் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  

நிர்வாகிகள் ஒவ்வொருவரும், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து ஜனவரி 5-ல் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியல் உண்மையானதே என உறுதிப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நெல்லை மக்களே ரெடியா? பொருநை மியூசியம்: டிக்கெட் விலை முதல் டைமிங் வரை.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!