
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில், இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நேற்று ஊர்வலம் நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், அனுமந்தபுத்தேரியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்த திறப்பு விழாவிற்கு எம்.சேகர் தலைமைத் தாங்கினார்.
இந்த திறப்பு விழாவிற்கு அனைவரும் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அப்போது, இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ் ஆகியவற்றை வழங்கக் கோரினர்.
மாவட்ட தலைவர் எல். முருகேசன், செயலாளர் அளகேசன் உள்ளிட்டோர் ஆகியோர் இந்த திறப்பு விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து பேசினார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்ற மலைவாழ் மக்கள் சங்கத்தினர், இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ் வழங்கக் கோரி ஊர்வலம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.