பள்ளிகள் திறப்பு..! 2200 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.! எந்த பகுதியில் இருந்து எத்தனை பேருந்துகள் இயக்கம்.?

By Ajmal KhanFirst Published Jun 2, 2023, 2:30 PM IST
Highlights

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து வருகிற 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வார இறுதி நாட்களான வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் 2200 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  

பள்ளிகள் திறப்பு- சிறப்பு பேருந்து

பள்ளி ஆண்டு இறுதி தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்து சுமார் 40 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதான் காரணமாக இந்த வருடம் வருகிற 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பள்ளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகள் மீண்டும் பணி செய்யும் இடங்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம் பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் 07/06/2023 அன்று பள்ளிகள் திறக்க இருப்பதால்,

2,200 சிறப்பு பேருந்து

இந்த வார இறுதி நாட்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் எங்கும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 900 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் 1,300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்து இயக்க திட்டம்

ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இதுமட்டுமின்றி மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை கட்டுப்படுத்த முடியாது.! பாஜக மூத்த நிர்வாகிகளை அலறவிடும் அண்ணாமலை

click me!