தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி விட்டு மாணவியை கடத்திய ஃபிராடு வாத்தியார்... உறவினர்கள் அதிர்ச்சி

First Published Apr 19, 2018, 2:50 PM IST
Highlights
The teacher who stole the poster by himself in Madurai


தான் இறந்ததாக தனக்கு தானே போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு, பள்ளி மாணவியைக் கடத்தி சென்ற ஆசிரியரை, போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் பாண்டியன். இவர் மதுரை புதூர் லூர்து நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி, ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன் சில காரணங்களை கூறி இப்பள்ளியில் இருந்து விலகிய அந்த ஆசிரியர், இவர் இறந்து விட்டதாகக்கூறி, கடந்த 11ம் தேதி மதுரை நகரின் பல்வேறு இடங்களில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதை நம்பி பள்ளி நிர்வாகம் சார்பில் அந்த ஆசிரியருக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த 11ம் தேதி அப்பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி ஒருவர் மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகாரில், கரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையின்போது, மாணவியின் வீட்டில் இருந்த செல்போனை போலீசார் கைப்பற்றினர். அது ஆசிரியர் ராஜேஷ்வர்ஷனயனுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் போஸ்டர் அடித்த அச்சக ஊழியர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராஜேஷ்வர்ஷன் உயிருடன் இருப்பதும், மாணவியை அவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கன்னியாகுமரி சென்று ராஜேஷ் வர்ஷனயனை தேடி வருகின்றனர்.

ஏற்கனவே ராஜேஷ்வர்ஷனயனுக்கு, இரண்டு மனைவிகள் இருப்பதும், அவர்களுக்கு  தலா 2 குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரிகிறது. தான் இறந்ததாக தனக்குத் தானே போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு மாணவியை ஆசிரியர் கடத்திச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!