
பள்ளி மாணவியை உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய வாலிபரை கல்யாணம் பண்ண சொல்லி கேட்ட காதலியை செல்போன் சார்ஜர் ஒயரால் இறுக்கி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த தாழனூர் சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து, பழனி என்பவரை 2வதாக திருமணம் செய்துள்ளார். மகள் சங்கீதா மற்றும் பழனியுடன் கே.வேளூர் அடுத்த ஒழலை கிராமத்தில் வசித்து வந்தார்.
2013ல் விபத்தில் பழனியும், 4 மாதங்களுக்கு முன் நோயில் ராதாவும் இறந்தனர். ராதாவின் அக்கா ராணியுடன் தங்கி சங்கீதா, பிளஸ்1 படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிளஸ் 1 தேர்வு முடிந்ததால் நவீன்குமார், தங்கை சங்கீதாவை தாழனூருக்கு அழைத்து சென்றார். கடந்த 16ம் தேதி சங்கீதா ஆதார் அட்டையை எடுத்து வருவதாக கூறிவிட்டு ஒழலைக்கு சென்றவர் திரும்பிவரவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கு வந்த நவீன்குமார், பிளேடால் கிழித்தும், வளையலால் குத்தியும் சங்கீதா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின்பேரில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் கே.வேளூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த புருஷோத் என்பவர், சங்கீதாவை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில்: கே.வேளூரைச் சேர்ந்த புருஷோத்தும், சங்கீதாவும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கிடையே சங்கீதாவுக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளதாக நினைத்து, அவரிடம் புருஷோத் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் சங்கீதாவின் காதல் விவகாரம் தெரிந்தே நவீன்குமார், அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். கடந்த 16ம் தேதி ஆதார் அட்டை நகல் எடுப்பதற்காக சங்கீதா ஒழலையில் உள்ள வீட்டிற்கு சென்றார்.