கடந்த 24 மணிநேரத்தில் 4.4 மிமீ மழை - இனி வெயில் தானாம்...!!!

Asianet News Tamil  
Published : Jul 24, 2017, 09:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
கடந்த 24 மணிநேரத்தில் 4.4 மிமீ மழை - இனி வெயில் தானாம்...!!!

சுருக்கம்

The Tamil Nadu Meteorological Department Director Balachandran said the heat will increase in Tamil Nadu for 2 days.

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

அக்னி நட்சத்திரம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு பெய்த மழை, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருவது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வலுகுறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் காற்றின் ஈரப்பதம் குறைந்திருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் எனவும், தெரிவித்தார்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும்  தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 4.4. மில்லி மீட்டர் அளவு மழையும், குன்னூரில் 1.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மதுரையில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

வாய்ப்பை தவறவிடாதீர்கள்! தாட்கோ கொடுக்கும் சூப்பர் வாய்ப்பு! அப்பல்லோ மருத்துவமனையில் வேலை.. ரூ.5,000 உதவித்தொகை!
திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!